Pages

Wednesday, May 28, 2014

கட்டணம் கட்ட முடியாததால் 75 வருடங்கள் கழித்து 99 வயதில் பட்டம் பெற்ற மூதாட்டி

அமெரிக்காவில் 75 ஆண்டுகளுக்கு முன் பட்டய படிப்பை முடித்துவிட்டு, அதற்குரிய கட்டணத்தை செலுத்த முடியாததால், 99 வயதில் பட்டத்தை வாங்கி இருக்கிறார் மூதாட்டி.
இந்த தகவல் அமெரிக்க மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தில் உள்ள பாங்கோர் நகரில் வசிப்பவர் 99 வயதான ஜெஸ்சி ஒயிட்.
இவர் கடந்த 1939ம் ஆண்டு பாங்கேரில் உள்ள பீல் கல்லூரியில் சுருக்கெழுத்து மற்றும் வரவு செலவு கணக்கு குறித்து டிப்ளமோ முடித்தார்.
ஆனால், பட்டமளிப்புக்கான கட்டண தொகை ரூ.295 கட்டணத்தை அப்போது ஜெஸ்சியால் செலுத்த முடியவில்லை. இதனால் அவருக்கு பட்டம் வழங்கவில்லை.
பட்டத்தை வாங்காமல் தன்னுடைய வாழ்க்கை பூர்த்தி ஆகாது என்ற சோகத்தில் இருந்தார் ஜெஸ்சி. பணம் கட்ட முடியாமல் தவித்தார்.
ஒயிட்டின் வயது ஏறிக் கொண்டே இருந்தது.இந்த விவரம் ஜெஸ்சியின் நண்பருக்கு தெரிய வந்தது. அவர் பீல் கல்லூரி தலைவர் ஆலன் ஸ்டீஹலை சந்தித்து விவரத்தை கூறி, பட்டமளிப்பு கட்டணத்தை செலுத்தினார்.
இதையடுத்து, கடந்த வாரம் பீல் கல்லூரியில் ஜெஸ்சி ஒயிட்டுக்கு மட்டும் பட்டம்அளிப்பதற்காக சிறப்பு விழா ஒன்றை கல்லூரி முதல்வர் ஸ்டீஹல் ஏற்பாடு செய்தார்.
அந்த விழாவில், தனது 99 வயதில் ஜெஸ்சி ஒயிட் பூரிப்புடன் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சி அமெரிக்க மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 comments

Post a Comment