Pages

Wednesday, May 28, 2014

வினோத தாய் வீட்டு பாடத்தை முடிக்காத மகனை கம்பியை கொண்டு தாக்கிய கொடுரம்

boyவீட்டு பாடத்தை முடிக்காத மகனை கம்பியை கொண்டு தாக்கிய கொடூர தாய் தப்பினார் சீனாவில் வீட்டு பாடத்தை முடிக்காத மகனை தாய் ஒருவர் சட்டைகள் தொங்கவிடும் கம்பியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜியா பிங் என்ற 6 வயது சிறுவன் சீனாவின் தெற்கு குவாங்டாங்கில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்து வருகின்றான். சிறுவன் சம்பத்தன்று வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வீட்டுபாடம் செய்யாமல் சிறுவன் விளையாட்டில் கவனம் செலுத்தியுள்ளான். இந்நிலையில் சிறுவன் வீட்டுபாடத்தை முடிக்காமல் இருந்ததை அவனது தாய் கண்டுபிடித்து தண்டித்துள்ளார்.
அந்த கொடூர தாய் தனது 6 வயது மகனை வீட்டில் சட்டைகள் தொங்கவிட பயன்படும் கம்பியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சிறுவனின் முதுகு புறம் முழுவதும் பார்க்க முடியாத அளவு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவன் பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது சிறுவனுக்கு பாடம் நடத்தும் ஆசிரியை சிறுவனின் காயத்தை கண்டுபிடித்து விசாரித்துள்ளார். பின்னர் சம்பவத்தை அறிந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் பார்த்துவிட்டு குழந்தையிடம் கொடூரமாக நடந்து கொண்ட தாயை கைது செய்யவில்லை.
இந்நிலையில் சிறுவனை தாய் கொடூரமாக தாக்கியதை அவர்கள் சரியானது என்றே பார்க்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பள்ளியில் சிறுவனின் படிப்பில் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து குறும்பு செய்யும் அந்த சிறுவன் பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுபாடங்கள் சரியாக முடிக்கவில்லை.
இதனையடுத்து அவர் இவ்வாறு தாக்கியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக்கூடாது என்று பொற்றோர்களிம் கூறியுள்ளோம் என்று  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். காயங்கள் குணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிறுவன் வீட்டிற்கு திரும்புவான் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜியாங்சு மாகாணத்தில் தொடர்ந்து திருடிய வாலிபரை அவர்களது பெற்றோர்கள் வீட்டில் சங்கிலி போட்டு கட்டிவைத்துள்ளனர்.  தொடர்ந்து திருட்டு வேலையை செய்யும் வாலிபர் ஜெயிலுக்கு சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் அவனை வீட்டில் கட்டிபோட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Post a Comment