Pages

Thursday, May 29, 2014

பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை

மக்களே உங்கள் பாஸ்போர்டை குழந்தைகளுக்கு எட்டாய இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், அல்லது சீன நபரைப்போல அயல்நாட்டில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.
சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சென்றிருந்தனர்.
விமானத்தில் செல்லும்போது, பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் பேனாவை எடுத்து படம் வரைந்து கொண்டே வந்துள்ளான் அச்சிறுவன்.
ஆனால் அவன் படம் வரைந்தது வெற்று காகிகத்தில் கிடையாது, தந்தையின் பாஸ்போர்ட்டில். இது தெரியாத தந்தை தென்கொரிய குடியுரிமை அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டை காட்டியபோது அதிர்ச்சியடைந்தார்.
தந்தையின் உருவமே தெரியாத அளவுக்கு கண்டபடி படம் வரைந்து வைத்துள்ளான் சிறுவன்.
பாதுகாப்பு காரணங்களால் சிறுவனையும், தந்தையையும் சீனாவுக்கு திருப்பியனுப்ப முடியாத நிலையில் தென்கொரிய அதிகாரிகள் உள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர்கள், பாஸ்போர்ட்டில் இருப்பது, அவர்தான் என்று கூறியும்கூட, தென்கொரிய அதிகாரிகள் ஏற்பதாக இல்லை.
பாஸ்போர்ட்டில் சிறுவன் வரைந்த அழகான ஓவியத்தை காண்பிக்கும் வீடியோ இணைப்பு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது

0 comments

Post a Comment