Pages

Wednesday, May 28, 2014

பெண்ணின் பிருட்டத்தை பதம்பார்த்த பாம்பு


மலசலக்கூடத்திற்கு சென்ற பெண்ணொருவரின் பிருடத்தை பாம்பொன்று பதம்பார்த்த சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

ஸ்பெயனின் வடமேற்பகுதியைச் சேர்ந்த இரிஸ் காஸ்டுரொவிட் என்ற 30 வயது பெண்ணே இத்தகைய நிலையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி பெண் மலசலக்கூடத்தின் கழிவிருக்கையில் அமர்ந்துள்ளார். இதன்போது ஒருவகை ஒலி கேட்பதை உணர்ந்த அவர் இருக்கையை விட்டு எழுவதற்கு முயன்றபோது பாம்பு ஒன்று அவரது பிருடத்தை தீண்டியுள்ளது.

வீறிட்டு கத்திய அவர் குனிந்து பார்த்தப்போது 20 சென்றிமீற்றர் நீளத்திலான பச்சையும் மஞ்சளும் கலந்த பாம்பு ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

பின்னர், அயலவர்களின் உதவியுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

"இவ்வாறான சம்பவம் எனக்கு நடந்ததையிட்டு நான் கவலைப்படவில்லை. ஆனால், என் பிள்ளைகளுக்க இவ்வாறு நடந்துவிடக்கூடாது' என அப் பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணொருவரும் இவ்வாறு பாம்புக்கடிக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment