Pages

Tuesday, May 27, 2014

மனசாட்சி இல்லா தந்தையின் கொடூர செயல்.


அமெரிக்கா அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் கோரி மெக்கர்த்தி இவரின் 23 மாத மகள் நீச்சல் குளம் அருகே விளையாடி கொண்டு இருந்தார்.

அவருடன் 5 வாரமே ஆன ஒரு நாய்க்குட்டியும் விளையாடி கொண்டு இருந்தது. அப்போது சிறுமி நாய்குட்டியை தூக்கினார். அப்போது நாய்குட்டி தவறி நீச்சல் குளத்தில் விழுந்து இறந்து விட்டது.

இதனால் கோபம் அடைந்த மெக்கர்த்தி தனது 23 மாத மகளை குளத்தில் எறிந்ததார். இது காணொளியாகவும் படம் பிடிக்கபட்டு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

குழந்தையை வேறொரு பெண் காப்பாற்றி முதல் உதவி சிகிச்சை அளித்து உள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் மகளை நீச்சல் குளத்த்தில் தள்ளிய குற்றத்திற்காக மெக்கர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

இது குறித்து மெக்கர்த்தி கூறும் போது அவள் 5 வாரமேயான நாய்குட்டியை நீச்சல் குளத்தில் எறிந்து விட்டாள் அது இறந்து விட்டது அவளுக்கு பாடம் புகட்டவே சிறுமியை நீச்சல் குளத்தில் எறிந்தேன் என கூறினார்.

0 comments

Post a Comment