இங்கிலாந்தில் ஒரு பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் கையுறையை வைத்து தைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் டெர்பிஷைர் பகுதியை சேர்ந்த 42 வயதையுடைய ஷாரோன் பிர்க்ஸ் என்பவர், அவரது கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கடந்த நவம்பர் மாதம் டெர்பி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
நவம்பர் மாதம் 19 ஆம் திகதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கருப்பை அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் தங்கியிருந்த அவர் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியை உணர்ந்துள்ளார்.
அடிவயிற்றில் பயங்கர வலியாக இருப்பதை அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தபோது வலி நிவாரண மாத்திரைகளை இவருக்கு வழங்கியுள்ளனர். ஆனாலும் ஷாரோனுக்கு தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது.
வலி குறையாத நிலையில் கழிவறையை பயன்படுத்த சென்ற ஷாரோன் அவரது உடலில் வேறொரு பொருள் உள்ளது என்பதை உணர்ந்தார்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அறுவை சிகிச்சையின்போது போது மருத்துவர்கள் பயன்படுத்திய கையுறைகளில் ஒன்று ஷாரோனின் உடலுக்குள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக ஷாரோன் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் வயிற்றுக்குள் இருந்த கையுறையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
இந்த தவறு எப்படி நடந்தது என்று மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் இச்சம்பவம் தொடர்பாக ஷாரோனிடம் மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

0 comments
Post a Comment