துபாய் நாட்டில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடம்தான் உலகில் மிக உயர்ந்த கட்டடமாகும். இது 828 மீற்றர்கள் உயரம் கொண்டது. தற்பொழுது, இதனை அடுத்த இடத்திற்கு தள்ளும் விதமாக சவுதி அரேபியா நாட்டில் மற்றொரு கட்டடம் எழுப்பப்படுகிறது.
கிங்டொம் டவர் (King dom Tower) என்ற பெயரில் எழுப்பப்படும் இந்த கட்டடம் ஒரு கிலோ மீற்றர் (1,000 மீற்றர்கள்) உயரத்தில் உருவாகிறது. கிங்டொம் டவர் கட்டடத்தின் தொடக்க கட்டுமான பணிகள் கடந்த டிசம்பரில் தொடங்கி விட்டன. இந்த கட்டிடம் 63 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கிலோ மீற்றர் உயரத்தில் கட்டப்படும் இந்த கட்டடத்தில் குடியிருப்புகள், ஆடம்பர விடுதிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

200 தளங்ளைக் கொண்ட இக்கட்டடத்தில் 160 தளங்கள் பொது பயன்பாட்டில் இருக்கும். செங்கடல் துறைமுக நகரத்தின் வடக்கே கிங்டொம் நகர் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் உருவாகிறது. அதில் ஒரு கட்டடப் பணியாக உருவாகும் கிங்டொம் டவரின் கட்டுமான மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டவரை வடிவமைக்கும் பொறுப்பை அமெரிக்காவின் சிகாகோ நகரை மையமாக கொண்ட Adrian smith and gordon gill architecture நிறுவனம் ஏற்றுள்ளது. கிங்டொம் நகரானது 3 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி உருவாக்கப்படும் என்று 2008ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.


0 comments
Post a Comment