Pages

Monday, June 16, 2014

ஜ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பிறந்த நாள்: ஜுன் 13, 1944

ஜ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பிறந்த நாள்: ஜுன் 13, 1944பான் கி மூன் ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளராவார். ஏழாவது பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் அப்பொறுப்பை ஏற்றார். இவர் 1944 ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர். பொதுச் செயலாளர் பதவிக்கு வரும்முன் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

பான் கி மூன் 1970ஆம் ஆண்டு சியோல் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து, பன்னாட்டு உறவுகள் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1985-ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சி பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த மூன், கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டோடு நின்று போன வடகொரிய அணு ஆயுத உற்பத்தி சம்பந்தமான ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையிலும் இவர் பங்காற்றினார். மரணதண்டனைகள் நிறுத்தப்படவேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியபோதும் சதாம் உசேனின் மரணதண்டனையை இடைநிறுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1871 - லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

* 1881 - ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

* 1886 - பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.

* 1934 - ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.

* 1955 - சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

* 1983 - பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.

* 1987 - தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த நாள்

0 comments

Post a Comment