Pages

Thursday, June 12, 2014

உலகின் மிகச் சிறிய நாடாக மாறிய 2ஆம் உலகப் போர் கால துறைமுகம்?

விடப்பட்ட 2ஆம் உலகப் போர் கால துறைமுகம் ஒன்றின் கடலிலுள்ள சிறிய பகுதியானது 22 பேர் வாழும் சுதந்திர நாடு என அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீலேண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குட்டித் தீவின் பரப்பளவானது 5,290 சதுர அடிகள் மட்டுமே ஆகும். இரண்டு கோபுரங்களின் மீது இரும்பு தளத்தினூடாக இணைக்கப்பட்டுள்ளது. 
பிரித்தானியாவின் பெலிக்ஸ்டோவ் நகரிலிருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த குட்டி நாட்டினை அங்கு வசிக்கும் 22 பேரும் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரமைந்துவிட்டதாக 1967ஆம் ஆண்டிலிருந்த தாங்களாகவே பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் இதனை தனி ஒரு நாடாக எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.
இங்கு வாழ்பவர்கள் தமக்கான அரசரைத் தேர்வு செய்துள்ளதுடன் தங்களுக்கான நாணயம், முத்திரை என்பவற்றையும் உருவாக்கியுள்ளார். அதுமட்டுமன்றி கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்கின்றனர்.
ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையத்தளத்தில் விற்பனை செய்வதன் மூலம் இம்மக்கள் வருமானம் ஈட்டுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
2012ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டு அரசனாக மூடி சூடியுள்ள 63 வயதான மைக்கேல் கூறுகையில், 'எமது சுதந்திரப் பிரகடனத்தை ஜேர்மனியும் பிரான்ஸும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஸ்கொட்லாந்து போன்று பிரித்தானியாவில் தங்கியிராமல் இருப்பது கடினமாக இருந்தது.
எங்களிடம் சுமார் 30 அறைகள் உள்ளன. தற்போதைய நாட்களில் அதிகமான நாட்கள் அலுவலகத்திலும் ஐ.டி வேலைகளிலும் ஒன்லைன் கடையிலுமே செலவாகின்றது' எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இக்குட்டி நாட்டில் சுற்றுலா தளத்திற்கு அரசு ஏற்பாடு செய்து வருகின்றதாம்.
- See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=31790&cat=miracle&sel=current&subcat=8#sthash.6UqJixXI.dpuf

0 comments

Post a Comment