Pages

Wednesday, June 11, 2014

திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்க ஜப்பான் முயற்சி.


அண்டார்டிக் கடலில் தமது வருடாந்திர திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கூறியுள்ளார். 1986 ஆம் ஆண்டில் திமிங்கல வேட்டைக்கு உலக அளவில் கொண்டுவரப்பட்ட தடையையும் மீறி ஜப்பான் அதன் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. விஞ்ஞான ஆய்வுகளுக்காக மட்டும் திமிங்கல வேட்டையை அனுமதிக்கும் திட்டத்தைப் பயன்படுத்தி ஜப்பான் திமிங்கலத்தைப் பிடித்து வந்தது. ஆனால், ஜப்பானின் இந்த நடவடிக்கை உண்மையில் விஞ்ஞான ஆய்வுகளுக்கானது அல்ல என்று கூறி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், திமிங்கல வேட்டை இந்த ஆண்டு கைவிடப்பட்டது. விஞ்ஞான ஆய்வு என்ற பெயரில் வணிக நோக்கத்துடன் ஜப்பான் திமிங்கல வேட்டையை நடத்தி வந்திருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. இதற்கிடையில், ‘திமிங்கல வேட்டை என்பது ஜப்பானிய மக்களின் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதை சர்வதேச சமூகத்திற்குப் புரியவைக்க தான் முயற்சிப்பதாக’ பிரதமர் அபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

0 comments

Post a Comment