மனிதனின் தலைமயிரைப் பயன்படுத்தி ஆடைகள், போர்வைகள் என பல பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் லித்துவேனியாவைச் சேர்ந்த கலைஞர்கள் இருவர் தலைமயிரைக்கொண்டு வயலின் இசைக் கருவி உருவாக்கி அதனை வாசித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.'வீதி இசைக்கலைஞர்கள்' தினத்தை பிரபல்யப்படுத்தும் முகமாகவே தலைமயிர் வயலின் இசைக்கப்பட்டுள்ளது. டடாஸ் மகஸிமொவாஸ் என்பவருக்கு இந்த சிந்தனை தோன்றியுள்ளது.
இதனையடுத்து வயலின் இசைக் கலைஞரான எய்மன்டாஸ் பெலிகாஸ் என்பவரிடம் இந்த விடயத்தைக் கூறி சம்மதம் வாங்கியுள்ளார் மகஸிமொவாஸ்.
மகஸிமொவாஸ், தனது தலைமயிரை வயலின் நடாவுக்கு பதிலாக பயன்படுத்த திட்டமிட்டார். ரெஸின் பதார்த்தத்தைக்கொண்டு தலைமயிரைக் கடினமாக்க அதனை வயலினில் பொருத்தி இசைக்கருவி இசைக்கப்பட்டுள்ளது.
இவற்றை ஒரு கோர்வையான வீடியோவாக படம்பிடித்து இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர்.
மிகச்சிறப்பான ஒலியை வெளிப்படுத்திய தலைமயிர் வயலின் வீடியோ யூடியூப் இணையத்தளத்தினூடாக இணையவாசிகளிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று பகிரப்பட்டு வருகின்றது.


0 comments
Post a Comment