Pages

Tuesday, June 3, 2014

ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் வைரஸ்களை நீக்கும் எளிய வழி..!



பெரும்பாலனவர்கள் தகவல்களை சேமிக்கும் பொருளாக USB DISK என்று சொல்லக்கூடிய பென்டிரைவ் தான் பயன்படுத்துவார்கள். இதில் அவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்வார்கள்.

இதில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை வைரஸ். அதுவும் பென் டிரைவ் என்றாலே சீக்கரம் வந்து ஒட்டிக்கொள்ளும் இந்த கெடுதல் செய்யும் புரோக்ராம். இதனால் நமது தகவல்களை நாம் பார்க்க முடியாமல் போய்விடலாம். நம் வைத்திருக்கும் போல்டர்கள் காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

இந்த வைரஸ்களை நீக்க கணினியில் ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் போகும். எனவே இது போன்ற அவசர காலங்களில் எந்த வித மென்பொருட்களும் இல்லாமல் வைரஸ்களை நீக்க ஒரு எளிய வழி உள்ளது.

இதை ஏற்கனவே பல இடங்களில் நிறைய பேர் படித்திருப்பீர்கள். ஆனாலும் சிலருக்கு இன்னும் இந்த விஷயம் தெரியாமல் இருக்கும் அவர்கள் தெரிந்து கொள்ளத் தான் இந்த பதிவு…!

பழுதான பென்ட்ரைவ்வை உங்கள் கணினியில் இணையுங்கள். பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை நீங்கள் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, G: அல்லது வேறெந்த டிரைவில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,

உங்கள் கணினியில் START+R அழுத்துங்கள். கீழே RUN சிறிய பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் CMD என டைப் செய்து Enter தட்டுங்கள்.

இப்பொழுது comment prompt என்ற விண்டோ தோன்றும், அதில் உங்கள் பென்டிரைவ் எந்த ட்ரைவ் லொக்கேசனில் உள்ளதோ அந்த ட்ரைவின் லெட்டருடன் கோலன் சேர்க்கவேண்டும். உதாரணம் உங்கள் பென்ட்ரைவ் G என்ற ட்ரைவில் இருந்தால் G:என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.

பிறகு attrib -r -a -s -h *.* இந்த வார்த்தையை சரியான இடைவெளியில் (space) கொடுத்து என்டர் செய்யுங்கள்.

ஒரு சில வினாடிகளில் உங்கள் பென்டிரைவில் அனைத்து கோப்புகளும் மீட்கப்பட்டிருக்கும். மீண்டும் உங்கள் பென்ட்ரைவ்யை ஓபன் செய்து கோப்பைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரியாக புரியாதவர்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பதிவு பயனுள்ளதாக இருந்ததா என்பதையும் சொல்லிவிட்டுப்போங்கள். இந்த விஷயம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள இந்த தகவலை ஷேர் செய்யுங்கள். நன்றி..!



இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.

0 comments

Post a Comment