Pages

Thursday, June 12, 2014

போன அதிஷ்டம் திரும்பியது: தொலைத்த அதிர்ஷ்ட இலாப சீட்டை மீண்டும் பெற்ற ஜோடி -

அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 50 மில்லியன் டொலர் மாபெரும் பரிசை வென்ற சீட்டைத் தொலைத்த ஜோடியொன்று அந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை தேவாலய தரையில் ஒருவர் கண்டுபிடித்து ஒப்படைத்ததையடுத்து தமக்குரிய பரிசை பெற்றுக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை கனடாவில் இடம்பெற்றுள்ளது.
நைஜீரிய வம்சாவளி இனத்தவர்களான ஹக்கீமும் அபியோலா நொஸிரும் கடந்த ஜனவரி 17 ஆம் திககி இடம்பெற்ற லொட்டோ மக்ஸ் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் மாபெரும் பரிசை வென்றிருந்தனர்.
எனினும், அந்த பரிசுக்குரிய சீட்டை அவர்கள் தொலைத்திருந்ததால் அவர்கள் அந்தப் பரிசை உரிமை கோர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் பல மாதம் கழித்து தேவாலயத்தில அந்த பரிசுச்சீட்டை கண்ட நபரொருவர் அதனை மேற்படி ஜோடியிடம் ஒப்படைத்ததையடுத்து திங்கட்கிழமை ரொரன்டோவில் இடம்பெற்ற வைபவத்தில் அந்தப் பரிசு அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அந்த அதிர்ஸ்ட இலாப சீட்டை தொலைத்ததையடுத்து பல இரவுகளை உறக்கமின்றி கழிக்க நேர்ந்ததாகவும் தற்போது தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அபியோலா கூறினார்.

0 comments

Post a Comment