Pages

Wednesday, June 4, 2014

வயலில் சிறுநீர் கழித்த சிறுவனின் உறுப்பை அறுத்த முதலாளி...



இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டம் கோராலி கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சேஷ்ராம். இவரது மகன் ரித்தேஷ்(5). இந்தச் சிறுவன் தன் தந்தை வேலை செய்யும் செங்கல் சூளை அருகே உள்ள வயல்வெளியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கே வந்த வயலின் உரிமையாளர் ரித்தேஷை பிடித்து தாக்கினார். அத்துடன் அவர் ஆத்திரம் தணியவில்லை. அந்த சிறுவரின் ஆணுறுப்பை அறுத்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டிற்கு வந்த அவன் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். உடனே அச்சிறுவனை அலகாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ரித்தேஷின் தந்தை பொலிசில் புகார் அளித்தார். போலீசார் தங்களை தேடுவதை அறிந்து வயல் உரிமையாளர் துர்கேஷ் மயூரா மற்றும் அவரது மகன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

0 comments

Post a Comment