செய்முறை :விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றவும். கால்களை கைகளுக்கு இணையாக வைத்து உடலை முன்புறமாக நன்றாக வளைக்கவும்.
படத்தில் உள்ளபடி இடுப்பு பகுதி மேல் புறம் தூக்கிய நிலையில் இருக்க வேண்டும். உங்களால் முடிந்த அளவு முன்புறமாக குனிய வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
பயன்கள் :
கீழ்நோக்கியவாறான நாய் வடிவ நிலையில் அதோ முகா ஸ்வானாசனத்தைச் செய்யும் போது, இரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு, தலைவலியிலிருந்த நிவாரணம் கிடைக்கிறது.

0 comments
Post a Comment