திருவனந்தபுரத்தில் 11 மாத குழந்தை தனியாக பாராசூட்டில் பறந்தது சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் மலபார் ஏரோ போர்ஸ் என்ற பெயரில் தனியார் பாராகிளைடிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ள இந்த இடத்தில் பாராசூட்டில் சுற்றுலா பயணிகள் பறந்து சாகசம் செய்யவும் வசதி உள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சகர்அகமதுவுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. தனது 11 மாத கைக்குழந்தை நியாநிஷானை பாராசூட்டில் தனியாக பறக்க வைத்து பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது குழந்தைக்கு முறையான பயிற்சி அளித்த அவர், அந்த குழந்தையை தனியாக பாரசூட்டில் பறக்க விட்டுள்ளார்.
சுமார் 40 அடி உயரத்தில் அந்த குழந்தை பறந்தபோது கதறி அழத்தொடங்கி விட்டது. இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்து குழந்தையை கீழே இறக்கும்படி கூறியுள்ளனர்.
உடனே பாராசூட்டை கீழே இறக்கி குழந்தையை சகர் அகமது சமாதானப்படுத்தினார். தந்தையை பார்த்ததும் அந்த குழந்தை மீண்டும் சிரிக்க தொடங்கியது.
ஆனாலும் இந்த விபரீத விளையாட்டு பற்றி சிலர் மனித உரிமை கமிஷனுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கும் புகார் தெரிவித்து உள்ளனர்.

0 comments
Post a Comment