கோழிக்கோட்டில் உள்ள ஒரு சாகச விளையாட்டுகள் ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்று 11 மாத பெண் குழந்தையின் பெற்றோர் கேட்டுகொண்டதன் பெயரில் அக்குழந்தையை சுமார் 100 அடி உயரத்தில் பாராசெய்லிங் சாகசத்திற்கு அனுப்பியது.
இந்நிறுவனத்தில் பாராசூட்டில் பறப்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் நிலையில், முழப்பிழங்காடு கடற்கரை பகுதிக்கு அக்குழந்தையை வரவழைத்த நிறுவனத்தினர் குழந்தைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து பெற்றோரின் சம்மதத்துடன் குழந்தையை பாராசெய்லிங் செய்ய தயாராக்கினர்.
பாரசூட் பறக்க ஆரம்பித்தில் இருந்து விடாமல் அழுத குழந்தை, அதிக உயரத்தில் அலற துவங்கியது.
இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து குழந்தையை கீழே இறக்கும்படி வலியுறுத்தினர்.
குழந்தையை கீழே இறக்கியபின் விபரீதமான இந்த செயலை செய்ததற்காக பெற்றோருக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தெரிவித்த குழந்தையின் தாய், இது இவ்வளவு பயப்படும் அளவிற்கு பெரிய ஆபத்து இல்லை. நானும் என் கணவரும் பாராசெய்லிங் சாகச பயிற்சியாளர்கள்.
எங்கள் குழந்தையால் இதனை செய்ய முடியுமா என பார்த்தோம். அவள் இதனை செய்துவிட்டாள் என்றார்.
பெற்றோர் பதற்றம் அடையாமல் இருந்தபோதும் மனித உரிமை ஆணையத்திற்கும், குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கும் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments
Post a Comment