Pages

Wednesday, May 28, 2014

400 வருடங்களுக்கு முன்பே நரேந்திர மோடி பிரதமராவார் என கணித்த பிரெஞ்சு ஞானி -

நரேந்திர மோடி மிகப் பெரிய உயரத்திற்கு வருவார் என்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே, பிரபலமான பிரெஞ்சு ஞானி மைக்கேல் டி நாஸ்ட்ரடாமஸ் சொல்லியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மோடி தலைமையில் இந்தியா மிகப் பெரிய வல்லரசாக உருவெடுக்கும் என்பதையும் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்புக் குறிப்பில் சொல்லி வைத்துள்ளாராம்.

இதுகுறித்த தகவலை பிரான்காய்ஸ் காதியர் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காதியர் கூறியுள்ளதாவது...

பிரான்ஸைச் சேர்ந்த அறிஞர் பாம்ப்ரெல்லே டி லா ரோச்போகால்ட் என்பவர் 1876ம் ஆண்டு இரண்டு பிரான்காஸ் பணத்திற்கு விற்கப்பட்ட ஒரு பழைய டிரங்குப் பெட்டியை கண்டுபிடித்துள்ளார்.

அதில், லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு பழைய ஆவணம் கிடைத்தது. அதை எழுதியவர் நாஸ்ட்ரடாமஸ்.



அதில் 2 பக்கங்களில் எழுத்துக்கள் உள்ளன. 4, 4 வரிகளில் மொத்தம் 100 வரிகள் உள்ளன. நாஸ்ட்ரடாமஸ், பல எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து அதை சரியாக எழுதி வைத்தவர்.

பிரெஞ்சுப் புரட்சி குறித்தும், அணு ஆயுதங்கள் குறித்தும், ஹிட்லரின் வருகை குறித்தும், செப்டம்பர் 11 அமெரிக்கத் தாக்குதல் குறித்தும் நாஸ்ட்ரடாமஸ் சரியாக கணித்து வைத்துள்ளார்.

இந்த நாஸ்ட்ரடாமஸ்தான் தனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பாஜக குறித்தும், இந்தியா குறித்தும், நரேந்திர மோடி குறித்தும் எழுதி வைத்துள்ளார்.

அதில் ஒரு வரியில் இப்படி வருகிறது.. Politicus Bharatus Janatus Indicus veni grandus est vingtus unus centurus - Congressus oublium est ... Politicus Bharatus Janatus Indicus veni grandus est para Indus cognisant Indica tum est..." இதன் தமிழ் அர்த்தம்.. 21வது நூற்றாண்டில் பாரதிய ஜனதாக் கட்சி இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும். காங்கிரஸ் மெதுவாக மாயமாகிவிடும்.

இந்துக்கள் யார் என்பது குறித்து அடுத்த வரி சொல்கிறதாம்...அது.. Indus terrum nostrum grandus homo manus onum unus familium planetum est. Indicus pax pacis terra est ferrum tempus... அதாவது இந்துக்கள் மிகவும் சகிப்புத்தன்மையுடன் கூடியவர்களாக இருப்பார்கள். பல்வேறு பெயர்களில் கடவுள் நம்மிடம் வந்து போவார்.

அவதாரங்களைக் கொண்டவராக இருப்பார், பல்வேறு ரூபங்களில் அவர் இருப்பார் என்பதை இந்துக்கள் நம்புவார்கள். சிலைகள் வைத்து வழிபடுவார்கள்.

இன்னொரு கணிப்பில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது...Politicus Bharatus Janatus Indicus tri pillarus est, Vajpayum, Advanum persistum est et Narendrum Modum. Vajpayum emergum est..." அதாவது பாஜகவில் மூன்று தூண்கள் இருப்பார்கள்.. ஏபி வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி. இதில் வாஜ்பாய் நாளடைவில் தீவிர அரசியலிலிருந்து போய் விடுவார். அத்வானி நிலைத்திருப்பார். நரேந்திர மோடி உருவெடுப்பார்.



இன்னொரு கணிப்பில், Narendrum Modum supremus chefum, ironus manus est et economicum grandum est என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, நரேந்திர மோடி தேசிய அளவில் தலைவராக உருவெடுப்பார். அவர் இரும்புக் கரம் கொண்ட தலைவராக இருப்பார். தனது மாநிலத்தை பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வைப்பார் என்று இதற்கு அர்த்தமாம்.



இது மட்டுமா.. நரேந்திர மோடி, பாகிஸ்தான், சீனா, திபெத் உள்ளிட்ட உலக நாடுகளுடன் எப்படியெல்லாம் உறவு வைத்திருப்பார்.

அவரது வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் கூட நாஸ்ட்ரடாமஸ் கூறியுள்ளாராம்.

0 comments

Post a Comment