
பாட்னாசாகேப் மக்களவைத் தொகுதியில் குஸ்ருபூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்மால்பிகா கிராமத்தில் 12-14 வயதுச் சிறுவர்கள்கூட வாக்களித்த விநோதம் அரங்கேறியுள்ளது. இதில், 70 சதவீத வாக்குகள் அன்று பதிவாயின. ஆனால், பெரும்பாலானவர்கள் விரல்களில் ஓட்டுப் போட்ட மை அடையாளம் இல்லை
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ராம் வினய் குமார் என்பவர் கூறும்போது, “இந்த முறை சிறுவர்கள் கூட வாக்களித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் தங்கள் விரல்களில் மை வைக்கப்படுவதை தவிர்த்துள்ளனர். அவர்கள் வேறு எவர் பெயரிலாவது மீண்டும் ஓட்டு போடலாம் என்ற காரணத்துக்காக அவ்வாறு இருந்துள்ளனர். இந்த முறை வாக்களிப்பதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது” என்றார்.
பாஜக வேட்பாளரான சத்ருகன் சின்ஹா, இந்த முறை சரியாக தேர்தல் பிரசாரத்துக்குக் கூட வரவில்லை. ஆனாலும் மோடி அலையால், இங்கே பாஜகவின் கை ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் சாவடியில்கூட, பாஜக முகவர் மட்டுமே இருந்துள்ளார்.
இந்த வாக்குச் சாவடியில் 1131 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் வாக்களித்துள்ளதாகக் கணக்கு உள்ளது. ஆனால், இங்குள்ளோர் பாட்னா, ராஞ்சி, மற்ற நகரங்களில் பணியில் உள்ளனராம். அவர்கள் கிராமத்துக்கு வந்து ஓட்டளிக்கவே இல்லை என்கின்றனர் இங்குள்ளோர்.

0 comments
Post a Comment