Pages

Saturday, May 24, 2014

மேலாடை இன்றி படிக்கும் பெண்கள் - வாசிப்பை ஊக்கப்படுத்தவாம்!


புத்தம் படிப்பதை ஊக்குவிப்பதற்காக பெண்கள் மேலாடை அணியாமல் மக்கள் கூடும் இடங்களில் புத்தகமும் கையுமாக அலைந்ததால் நியூயார்க் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இதை ஊக்கப்படுத்துவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எழுத்தறிவு கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் நோக்கமே வாசிப்பை செக்சியாக மாற்றுவதுதான்.




இதற்காக கிளப்பை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல் உடலை காண்பித்தபடி நியூயார்க் பூங்காவில் புத்தகமும் கையுமாக அலைந்தனர். இதை ஆச்சரியமாக


 பார்த்த பொதுமக்கள், எதற்காக இப்படி சுற்றுகிறார்கள் என்பதை கேட்டு அறிந்துகொண்டனர். இதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறித்த விழிப்புணர்வு வரும் என்று அந்த கிளப் கூறுகிறது. இந்த நோக்கத்துக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கிளப் ஆரம்பிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் பெண்கள் பொது இடத்துக்கு வருவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதை மக்களுக்கு நினைவூட்டவும் இந்த புத்தக நங்கைகள் அங்குமிங்கும் உலாவியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு இதுபோல மேலாடை இன்றி சுற்றித்திரிவதும் வாசிப்பதுமாக மக்களின் கவனத்தை ஈர்ப்பார்களாம். அதுசரி.. மக்களின் கவனம் புத்தகத்தின் மீதுதான் போகிறதா என்பதுதானே இப்போது கேள்வியே..?

0 comments

Post a Comment