Pages

Tuesday, May 27, 2014

150 வருடங்களை கடந்த Gare du Nord.


பரிசின் மிகப் பழமை வாளிணிந்த கட்டடங்களில் ஒன்றான கார்-து-நோர் (Gare du Nord) தொடருந்து நிலையம் தனது 150 வருட நிறைவை எட்டி உள்ளது. ஒரு நாளைக்கு 700,000 பேர்வரை வந்து செல்லும் இந்தத் தொடருந்து நிலையம் கடந்த ஏப்ரல் 19ம் திகதி, 1864ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அந்தக் காலக் கட்டடக்கலைக்குச் சான்றாக இதன் முகப்புப்பகுதி 180 மீற்றர் நீளத்திற்கு வெண்ணிறச் சலவைக்
கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இதன் மேற்பகுதியில் 23 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 23 சிலைகளும் இந்தத் தொடருந்துநிலையம் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கிருந்து தொடருந்து சென்ற 23 நகரங்களையும் குறிப்பதாக வைக்கப்பட்டது.

இன்று ஜரோப்பாவில் அதிகத் தொடருந்து வந்து செல்வும் தொடருந்து நிலையமாக கார்-து-நோர் மாறியுள்ளது. இங்கு
தினமும் இரண்டாயிரத்து நூறு தொடருந்துகள் வந்துபோகின்றன. எண்பதாயிரம் சதுர அடிகளைக் கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தின் ஐந்து அடுக்குகளும் 2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் SNCF இனால் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. 2018ம் ஆண்டு வரை இந்தத் தொடருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைகள் நடைபெறுகின்றன. ஐம்பது மில்லியன் முதலீட்டில் மேலும் ஒரு யூரோஸ்டார் செல்லும் சோதனைப் பகுதி மற்றும் அதிவேகத் தொடருந்துத் தடங்கள் திறக்கப்படுவதோடு ஒரு வியாபார மையமும் அமைக்கப்படஉள்ளது.

0 comments

Post a Comment