விண்வெளி மையத்தில் காய்கறி பயிரிடும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். விண்வெளி மையத்தில் பல்வேறு சாகசங்களையும், புதிய பல சோதனை முயற்சிகளையும் விண்வெளி வீரர்கள் நிகழ்த்தியுள்ளனர். அதில் மற்றொரு முயற்சியாக, காய்கறி செடிகளை விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்கும் புதிய முயற்சியை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். விண்வெளி மையத்தில், சூரிய ஒளியைப் போன்று மின் விளக்குகள், தட்பவெப்பம் ஆகியவற்றை உருவாக்கி, அதற்குள் சில, குறுகிய கால காய்கறி செடிகளை வளர்க்கும் பணியை விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். அந்த தோட்டத்தின் புகைப்படங்கள், நாசா இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுக்குத் தேவையான சத்தான காய்கறிகள் விண்வெளியிலேயே கிடைக்கும் என்றும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

0 comments
Post a Comment