Pages

Wednesday, May 28, 2014

2ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்!

இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையை நிலத்தில் இருந்தவர்கள் தாங்கிப்பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் சீனாவின் குவாங்டொங் மாநிலத்தில் சொங்ஷான் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

தாயைத் தேடிக்கொண்டிருந்த ஒரு வயதுக் குழந்தை தவறுதலாக ஜன்னலினூடாக வெளியில் விழுந்துள்ளது.

குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக ஜன்னலைவிட்டு நழுவி கீழே விழுவதை அவதானித்த சிலர் பெரும் முயற்சியில் ஈடுபட்டு விழுந்த குழந்தையை தாங்கிப் பிடித்துள்ளனர்.

கரணம் தப்பினால் மரணம் என்பது போல அக்குழந்தை மயிரிழையில் உயிர்பிழைத்துள்ளது. இக்காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.













 

0 comments

Post a Comment