Pages

Sunday, May 25, 2014

இரண்டு கால்களுடன் வாழும் 4 வயது பூனை


விபத்தொன்றில் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்த 4 வயதுடைய பூனையொன்று  பின்னங்கால்களை மட்டும் கொண்டு பல்வேறு விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றது.

இப்பூனையில் சாகசங்களை அதனது உரிமையாளரான ஜொவியல் பெலினி தனது முகத்தள பக்கத்தில்; பதிவேற்றம் செய்துள்ளார்.

புற்களை வெட்டும் இயந்திரத்தில் தனது முன்னங்கால்களை இப்பூனை இழந்துள்ளது. குறித்த விபத்தில் உயிராபத்தின்றி தப்பிகொண்ட இப்பூனையை அநாதவரான நிலையில் விட்டுவிட மனிமின்றி வீட்டு உரிமையாளர் மெர்கரி என அதற்கு பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

விபத்தில் கால்களை இழந்தாலும் அதனை பொருட்படுத்தாத அந்த பூனை மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. பூனை குணமடைய வேண்டும் என்பதற்காக அதனது உரிமையாளர் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அந்த பூனை சராசரி பூனைகளை போன்று விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றது.

'மெர்கரி தனது முன்னங்கால்கள் இரண்டையும் இழந்திருந்தாலும் ஏனைய பூனைகளை போன்றே காணப்படுகின்றது. விளையாடுவது, குதிப்பது, மற்ற பூனை, நாய்களுடன் சேர்ந்திருப்பது, கட்டிலில் உறங்குவது என அனைத்தையும் செய்கின்றது. இந்த உலகில் ராஜா தான் என அது தன்னை நம்பிகொண்டுள்ளது' என அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


0 comments

Post a Comment