Pages

Sunday, May 25, 2014

சாம்பல் மீது படுத்து உறங்கும் விநோத மனிதன்.


ஐரோப்பாவில் நபர் ஒருவர் அனைத்து பொருட்களையும் எரித்து விட்டு சாம்பல் மீது படுத்து உறங்குவது விநோதமாக உள்ளது.
ஐரோப்பா நாட்டில் லுட்விக் டொலெசல் (58), என்ற நபர் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எரித்து விட்டு சாம்பல்களையே தனது படுக்கையாக மாற்றி அதன் மீது படுத்து உறங்குகிறார்.
மேலும், இவர் தனது படுக்கை மற்றும் தலையனை ஆகியவற்றையும் எரித்து உள்ளார். இதனால் இவரை ஐரோப்பாவின் அசிங்கமான மனிதன் என அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து டொலெசல் கூறுகையில், தான் ஒரு வருடங்களுக்கு முன்பு தனது வேலையை விட்டதாகவும், அதன் பிறகு இங்கு நெருப்புடன் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தினமும் சூடான சாம்பலில் படுத்து உறங்குவதால் அது குளிருக்கு இதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டொலெசல், மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், இவ்வாறு தனது வாழ்க்கையை தீ மற்றும் சாம்பலுடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. (ஸ)

0 comments

Post a Comment