Pages

Tuesday, May 27, 2014

மிகச்சிறிய பாரசூட்டில் குதித்துச் சாதனை


ஐக்கிய அரபு குடியரசில் உள்ள துபாய் நாட்டில், வெனிசூலா நாட்டைச் சேர்ந்த எர்னெஸ்டோ கெயின்ஸா என்பவர் 14,000 அடி உயரத்திலிருந்து போர்வை அளவிலான சிறிய பாரசூட் மூலம் குதித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக இதுபோன்ற சாகசங்களுக்கு 80 முதல் 200 சதுர அடி வரையிலான பரப்பு கொண்ட பாராசூட்டை வீரர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால், கின்னஸில் இடம் பிடிப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து இவர் பயன்படுத்திய பாராசூட்டின் பரப்பளவு 35 சதுர அடிதான்.
கடந்த வாரம் துபாய் கிளப்பில் நடந்த ‘ஸ்கைடைவிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சாதாரண போர்வைஅளவே உள்ள பாராசூட் மூலம் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து பத்திரமாக தரையிறங்கினார். வெறும் 3 நிமிடங்களில் நடந்தேறிய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. அந்த வகையில் கடந்த 2006ம் ஆண்டு பிரேசில் நாட்டை சேர்ந்த லைகி கானி என்பவர் பயன்படுத்திய பாராசூட்டே இதுவரை சாதனையாக இருந்தது. அதைவிட எர்னஸ்டோ கெயின்சா பயன்படுத்திய பாராசூட், 0.18 சதுர மீற்றர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment