அதே சமயம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் குடிநீர் குறையும் போது அதனை பூமியில் இருந்து கொண்டு செல்வதற்கும் கூடுதலான செலவு ஆகிறது. இந்த இரண்டையும் தவிர்க்க, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் அவர்கள் குளிக்கும்போது கிடைக்கும் கழிவுநீர் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும், சிறுநீரில் இருந்து கிடைக்கும் அமோனியாவை எரிபொருளாகவும் மாற்றும் கருவியை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கருவி விண்வெளி பயணத்தை கருத்தில் கொண்டுதான் தயாரிக்கப்பட்டது என்றாலும், எந்த இடத்திலும் கழிவுநீரை சுத்திகரிக்க பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

0 comments
Post a Comment