இருந்தாலும் மைக் மோர் தனது 25 வது வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது இயலாமையை காரணம் காட்டி அந்த பெண் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னார் அவர் 2007ம் ஆண்டு சீன மருத்துவர் கோர்டான் லீயை சந்தித்தார். மருத்துவர் லீ அவரது குறையை போக்க முன்வந்தார். செயற்கையான ஆணுறுப்பு பொருத்தி அவரை எல்லோரையும் போல ஆண்மகனாக மாற்றலாம் என்று தைரியம் கொடுத்தார்.

அறுவை சிகிச்சை மூலம் மைக்கின் தொடையில் இருந்து சதைகளை எடுத்து அவருக்கு செயற்கை ஆண் உறுப்பு செய்து பொருத்தினார். அதன் பின்னர் மைக் 2011ம் ஹேதர் (Heather) என்ற 25 வயது பெண்ணை சந்தித்து தனக்கு ஏற்பட்டுள்ள குறையையும், அதனை நிவர்த்தி செய்ய செய்துகொண்ட சிகிச்சை முறையையும் கூறி திருமணம் செய்துகொண்டார்.

செயற்கை ஆண் உறுப்பு மூலம் அவருக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஆண்குழந்தை பிறந்தது. உலகிலேயே செயற்கை ஆணுறுப்பு பொருத்திய ஒருவர் குழந்தை பெறுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு மெம்பிஸ் என பெயரிட்டுள்ளனர். இது குறித்து மைக் மோர் கூறியதாவது:- தனக்கு வந்த இந்த குறை குணமாகும் என தான் கனவில்கூட நினைக்கவில்லை என்றும், தான் தற்போது மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும், விரைவில் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments
Post a Comment