பிரேசில் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2014 போட்டிகள் வரும் ஜுன் மாதம் 12ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்களும், மற்றும் விளையாட்டு வீரர்களும் உலகின் பல நாடுகளில் இருந்து வரவுள்ளனர்.
இந்நிலையில் உலக்ககோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள பாலியல் தொழிலாள பெண்கள் பிரேசில் நாட்டில் குவியத்தொடங்கியுள்ளதாக செய்திகள்கூறுகின்றன.
எனவே பிரேசில் நாடு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு வரும் பார்வையாளர்களும், விளையாட்டு வீரர்களும் பயன்படுத்துவதெற்கன ஸ்பெஷல் காண்டம் ஒன்றை அரசே வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சின்னம் இருக்கும் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ள அந்த காண்டம், இலவசமாகவே நாடு முழுவதிலும் விநியோகம் செய்யப்படும் என்றும், உல்லாசமாக இருக்க விரும்பும் ஆண்கள் அனைவரும் இந்த காண்டம் பயன்படுத்தி பாலியல் நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவும் பிரேசில் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments
Post a Comment