இரு கைகளும் இல்லை என்பதையே மறக்கடிக்கச் செய்யும் விதமாக எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் மேசைப் பந்தாட்டத்தில் (டேபிள் டென்னிஸ்) கலக்குகிறார். எகிப்தைச் சேர்ந்த இப்றாஹிம் ஹமதோ என்பவர் 10 வயதில் விபத்தொன்றின்போது தனது இரு கைகளையும் இழந்துள்ளார். ஆனாலும் தனது விருப்பத்துக்குரிய மேசைப் பந்தாட்டத்தினை கைவிடாமல் பயிற்சி மேற்கொண்டுள்ளார். முயற்சி இருந்தால் எதுவும் தடை இல்லை என்பதுபோல் தற்போது பந்தினை பரிமாற கால்களையும் துடுப்பினை வாயினால் பிடித்துக்கொண்டு அபாரமாக விளையாடுகிறார் இப்றாஹிம்.
‘எனது வாழ்க்கையின் மிகச்சிறந்த விடயம் எனது மனைவி. எனக்கு எல்லாமே அவர்தான். இரண்டாவது பகுதி மேசைப் பந்தாட்டம். இதில் எனது வெற்றியை கண்டேன். நான் வெற்றிபெறும் ஒவ்வொரு புள்ளியு; எனக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது’ என இப்றாஹிம் தெரிவித்துள்ளார்


0 comments
Post a Comment