
முன்னணி டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் இரண்டாவது தடவையாக இரட்டைக் குழந்தைகளின் தகப்பனாராகியுளார். நேற்றைய தினம் ஸ்விச்சர்லாந்தின், சூரிச் நகர மருத்தவமனையில் பெடரரின் மனைவி, ஆண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த செய்தியை பெடரர் - டுவிட்டர் மூலமாக அறிவித்துள்ளார். பெடரர், மிர்கா ஜோடிக்கு முதலில் பிறந்ததும் இரட்டைக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஜோடி பெண் ஜோடி.
மாட்ரிட் மாஸ்டேர்ஸ் தொடரில் விளையாடி வந்த ரோஜெர் பெடரர், தனது குழந்தைகளின் பிரசவத்திற்காக அந்த தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் ரோம் மாஸ்டேர்ஸ் போட்டிகளில் அவர் பங்குபற்றுவதும் சந்தேகம் என பெடரரின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் மே 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் நிச்சயம் பங்கு பற்றுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
17 தடவைகள் கிரான்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், 2000ஆம் ஆண்டில் இருந்து எந்த ஒரு கிரான்ஸ்லாம் தொடரிலும் விளையாடாமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments
Post a Comment