Pages

Saturday, May 24, 2014

அண்ணனால் சோகத்தில் நின்ற திருமணம் தம்பியால் களைகட்டிய விநோதம்....



இந்தியாவில் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டி குப்பத்தை சேர்ந்த விவசாய வாலிபரான ராஜு என்பவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த மாளவிகா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று (9–ந்தேதி) முத்தாண்டிகுப்பத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருமணத்துக்காக பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு வினியோகிக்கப்பட்டு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு நடைபெற்றதை தொடர்ந்து அன்று இரவில் மாப்பிள்ளை, பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்திருந்தனர்.

திருமண நாளான நேற்று அதிகாலையில் அந்த மண்டபத்தில் இருந்து மணமகன் ராஜு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். முகூர்த்த நேரம் நெருங்கியும் ராஜு திரும்பாததால் கல்யாண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ராஜுவை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

எனவே மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார், உறவினர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு, ராஜுவின் தம்பியான ஆனந்த் என்பவரை மாளவிகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் எடுத்த முடிவிற்கு முதுகலை பட்டதாரியான ஆனந்தும் கட்டுப்பட்டார்.

இதனால் அண்ணனால் சோகத்தில் ஆழ்ந்த திருமண மண்டபம் தம்பியால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியது. உறவினர்கள், நண்பர்கள் உட்பட அனைவரும் அச்சதை தூவி வாழ்த்த மணமகள் கழுத்தில் ஆனந்த் தாலி கட்டியுள்ளார்.

0 comments

Post a Comment