குழந்தைகள் என்றால் பொம்மைகளுக்கு ஆசைப்படுவார்கள், ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த 3 வயது சிறுமி காலனிகளுக்கு ஆசைப்படுகிறார். இங்கிலாந்தின் பொர்ட்ஸ்மொத் நகரில் உள்ள அமெலியா என்ற இந்த சிறுமி பேஷன் மீது ஆர்வம் கொண்டுள்ளார். விளையாட்டாக தனது தாயின் காலனிகளை உடுத்தி கொண்டு வீட்டை வலம் வருவார். தற்போது அவருக்கு காலனிகளின் மீது ஆர்வம் கூடி, அவரிடம் இப்போது 35 ஜோடிகள் காலனிகள் உள்ளது.
இதுகுறித்து அவரது தாயார் கூறுகையில், அமெலியாவிற்கு நான் கொடுக்கும் பணம் முழுவதும் காலனிகளுக்கே பயன்படுத்துவதாகவும், இதனை தெரிந்த உறவினர்கள், அவருக்கு காலனிகளையை பரிசாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் பள்ளிக்கூடம் கூட செல்லாத இவர் தற்போது மாடலிங் செய்ய உள்ளார்.



0 comments
Post a Comment