புதுமையான விசித்திரமான மனிதர்கள் வரிசையில் புதியஉலகம் வாசகர்களாகிய நீங்கள் இன்று சந்திக்க இருக்கும் மனிதர் ஒரு இளம் பெண். இந்தக்காலத்து பெண்களுக்கு உணவு என்றால் பீட்சாவே பர்க்கரோ இல்லை வேறு ஏதாவது நவீன உணவுகள்தான் பிடிக்கிறது. ஆனால் இங்கே சற்று விசித்திரமாக மண்தான் எனக்கு ரொம்பவும் பிடித்த உணவு என்கிறார் ஒரு இளம் யுவதி. இவரே இன்றைய விசித்திர மனிதர்கள் பகுதியின் கதாநாயகி.
கன்சாஸ் சிட்டியில் வசிக்கும் 19 வயதான ………… எனும் இளம் பெண் மண் உண்ணும் வினோத பழக்கவழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இவர் 5வயதாக இருக்கும் போது மண்ணை உண்டு அதிலிருந்து இப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக குறிப்பிடுகிறார். கடற்கரை பூங்கா விளையாட்டு திடல் இங்கெல்லாம் மண்ணை சேகரித்து வைத்து தான் “மொறு மொறு” என்று சாப்பிட்டு வருகிறார். சிப்ஸ் உடன் மண்ணை தொட்டு ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்.
இவர் ஒரு நாளைக்கு 6 தடவைகளுக்கு மேல் மண் சாப்பிடுவதாகவும் இப்பழக்கம் ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை 11 ஆயிரம் தடவைகளுக்கு மேல் மண் சாப்பிட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் மேற்குறிப்பிட்டவாறு கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் கிடைக்கும் ஒரு வகை மண்ணையே இவர் விரும்பி உண்டு வருவதாக தெரிவிக்கிறார். இது பற்றிய வியப்பூட்டும் தருணங்களை நீங்கள் காணொளியில் காணலாம்… மீண்டும் இன்னும் ஒரு விசித்திர மனிதரோடு சந்திப்போம்.

0 comments
Post a Comment