Pages

Tuesday, May 27, 2014

விமானங்களில் உள்ள உயிர் காக்கும் அங்கி


விமானப் பயணத்திற்கு முன்பாக பயணிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களில் ஒன்றாக, விமானம் அவசர நிலைமையின்கீழ் கடற்பரப்பில் (அல்லது வேறு நீர்ப்பரப்பில்) இறக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, பயணிகள் உயிர் காக்கும் அங்கியை எடுத்து அணியும்படி பணிக்கப்படுவர்.  இந்த அங்கியை அணிந்து அதில் உள்ள ஒரு இழையை பிடித்து இழுப்பதன் மூலம் அங்கியில் தன்னிச்சையாக காற்றை நிரப்ப முடியும். பயணிகள் விமானத்தை விட்டு வெளியேறும்வரை காற்றை நிரப்ப கூடாது எனவும் அறிவுறுத்தப்படுவர்.
இது ஏன்னெனத் தெரியுமா?
 அங்கியில் உள்ள காற்று நீர்ப்பரப்பில் மனிதனை மிதக்கவைக்கும்.  விமானம் உடைந்து அல்லது அதன் கதவுகள் திறக்கப்படும்பேது நீர் உட்புகுமாயின் இது பயணிகள் வெளியேறுவதை தாமதப்படுதும்.  ஒரு பயணி ஏற்கனவே அங்கியில் காற்றை நிரப்பியிருந்தால், உட்புந்த கடல் நீரும் மிதக்கும் அங்கியுமாகச் சேர்ந்து பயணியை விமானத்தின் கூரையை நோக்கி உயர்த்தி அளுத்திக் கொள்ளும்  பயணியால் கால்களை நிலத்தில் ஊன்றவோ பயன்படுத்தவோ முடியாது போய்விடும். இது பயணி வெளியேறி உயிர் பிழைக்கும் வாய்ப்பை முற்றாகத் தடுத்துவிடும்.  ஆக, உயிர் காக்கும் அங்கி, உயிர் போக்கும் அங்கியாக மாறிவிடும்!
இதனால்தான், அவசர நிலைமைகளில் விமானத்தில் இருந்து வெளியேறும்வரை, அங்கியில் காற்றை நிரப்பக்கூடாதென அறிவுறுத்தப்படுகிறது. தெரிந்து கொள்வோம் - பாதுகாப்பாகப் பயணம் செய்வோம்.
UA1549
US Airways Flight 1549 நியூ யோர்க்கில் உள்ள ஹட்ஸன் வாவியில் இறங்கியது. [CC-BY] David Watts

0 comments

Post a Comment