ஒருவர் தனது 47 வயதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணகளை முடித்த சம்பவமொன்று இந்தியாவின் சட்டீஸ்கரில் இடம்பெற்றுள்ளது. ஆச்சரியம் ஆனாலும் உண்மை.
சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா என்ற 47 வயது நபரே இந்த அதிசயத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் கொடுக்கும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் இந்திய அரசாங்கம் ரூ. 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார். கிடைக்கும் பணத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 ஆயிரமும், தனக்கு ரூ 25 ஆயிரமும் என பங்கிட்டுக்கொண்டுள்ளனர்.
பல திருமணங்களில் அதிகாரிகளின் சாட்சிக் கடிதத்தை அவர் போலியாக தயாரித்திருக்க வாய்ப்பிருப்பதாக பொலிஸார். கூறியுள்ளனர். ராஜ்நண்டன் பகுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள விஜய் மீது இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 420, 467 மற்றும் 468இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது விஜயிடம் விசாரணை நடத்தி வரும் பொலிஸார், விசாரணையின் முடிவில் அவரது திருமணங்களின் எண்ணிக்கை கூடவும், குறையவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

0 comments
Post a Comment