உலகில் தற்போது வாழும் மிக உயரமான மனிதராக கின்னஸ் சாதனை படைத்துள்ள மொங்கோலியரான பாவோ சிசுன், இரண்டு டால்ஃபின்களை காப்பாற்றியுள்ள விவகாரம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
சீனாவின், லியோனிங் மாகாணத்தில் உள்ள ஃபுஷுன் எனும் டால்பின்கள் காப்பகத்தில் இரு டால்பின்கள் பிளாஸ்டிக் துகள்களை தவறுதலாக விழுங்கியதால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன.
அவற்றின் வயிற்றுப் பகுதியில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் துகள்களை மீட்டெடுக்க இயந்திரங்கள் முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து பாவோ சிசுனுக்கு அழைப்பு விடப்பட்டது.
அவருடைய மொத்த உயரம் 7 அடி. அவரது கையின் நீளம் மாத்திரம் 1.06 மீற்றர். டால்பினின் வாய் வழியாக கைகளை நுழைத்த பாவோ, பிளாஸ்டிக் துண்டுகளை வெளியில் எடுத்துவிட்டார்.
பாவோவின் கையை டால்பின்கள் கடிக்காதவாறு அவற்றின் வாய் துவாலையால் போர்த்தப்பட்டது. தற்போது டால்பின்களிடமிருந்து பெருமளவிலான பிளாஸ்டிக் துகள்கள் வெளியகற்றுப்பட்டு விட்டதால் டால்பின்கள் விரைவில் மீண்டும் ஆரோக்கியமடைந்துவிடும் என்கிறார்கள் காப்பக அதிகாரிகள்.




0 comments
Post a Comment