Pages

Sunday, May 25, 2014

கல்­முனையில் பிர­மாண்­ட­மான போயிங் ரக விமானம்!



கல்­முனை, மரு­த­மு­னையின் பிர­தான வீதி­யி­ல­மைந்­துள்ள வர்த்­தகக் கட்­டி­ட­மொன்றின் மேல் பிர­மாண்­ட­மான போயிங் ரக விமான மாதி­ரி­யொன்று அண்­மையில் நிரந்­த­ர­மாக நிறு­வப்­பட்­டுள்­ளது.
‘ஸ்ரீலங்கா எயார்­லைன்ஸின் போயிங் பய­ணிகள் விமா­னத்தின் மாதி­ரியைப் ஒத்த இந்த விமானம் 17 அடி நீள­மா­னதும் 23 அக­ல­மும் கொண்டது. இந்த விமா­னத்­தினை ஆசி­ரி­ய­ர்  ஐ.எல்.எம். இஸ்­மாயில் மற்றும் அவரது மகன்மார் இணைந்து உருவாக்கிறுள்ளார்கள். இதற்காக 200,000 ரூபா செல­வா­னது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பயண முகவர் நிலை­யத்தின் விளம்­ப­ரத்­திற்­கா­கவே இந்த விமானம் வடிவமைக்கப்பட்டதாக விமா­னத்தை வடி­வ­மைத்­த ஆசி­ரி­ய­ர்  ஐ.எல்.எம். இஸ்­மாயில் தெரிவித்துள்ளார்.
மரு­த­மு­னையில் தமிழ்–சிங்­கள புது­வ­ருட வியா­பாரம் களை­கட்­டி­யுள்ள நிலையில் மரு­த­மு­னையின் பிர­தான வீதியில் அமைந்­துள்ள சுமார் 75 கிலோ கிராம் நிறை­யு­டைய அலு­மி­னியம், கல்வனைஸ் இரும்புத் தகட்டினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட விமானம் பொது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. 

0 comments

Post a Comment