.jpg)
தனது எஜமானினுடைய நான்கு வயது குழந்தையின் காலைக்கடித்த நாயொன்றை பூனையொன்று விரட்டியத்த சம்பவமொன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
டாரா என்று அழைக்கப்படும் பூனையே இவ்வாறு துணிச்சலுடன் செயற்பட்டுள்ளது. இப்பூனையானது எரிகா என்ற பெண்ணின் செல்லப்பிராணியாகும்.
இவர், வீட்டு வளாகத்தில் தனது 4 வயது குழந்தையை விளையாடவிட்டு பூக்களுக்கு தண்ணீர் பாய்ச்சிகொண்டிருந்துள்ளார். இதன்போது எதிர்பாரத விதமாக வந்த நாயொன்று குழந்தையை தள்ளிவீழ்த்தி விட்டு குழந்தையின் காலை பிடித்து இழுத்துள்ளது.
இச்சம்பவத்தால் அதர்ச்சியடைந்த குழந்தை வீரிட்டு அழ அதனைப் பார்த்த பூனை பாயந்துசென்று நாயை தனது கால்களால் அடித்து துரத்தியது.
'இவ்வறான துணிச்சல்மிக்க பூனையொன்றை நான் இதுவரை கண்டதில்லை. எந்தவொரு பூனையும் இவ்வாறு துணிகரமாக நாயொன்றுடன் சண்டையிட்டதை காண்டதில்லை. அதுவும் எனது பூனை இவ்வாறு செய்ததா என்று எண்ணுகையில் அதிர்ச்சியாக இருக்கின்றது' என்று அச்சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)

0 comments
Post a Comment