ரோட் தீவு (State of Rhode Island) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. அமெரிக்காவின் 13-வது மாநிலமாக இணைந்தது. புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும்.ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ்.
ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் 13-வது மாநிலமாக 1790-ல் இணைந்தது.
ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது.

0 comments
Post a Comment