Pages

Sunday, June 15, 2014

10 வயதில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த சிறுவனுக்கு அமெரிக்க அதிபராக ஆசை

அமெரிக்காவில் 10 வயதில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து சாதனை படைத்துள்ள சிறுவன், அமெரிக்க அதிபராக ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவில் சாக்ரமெண்டோ என்ற இடத்தில் 10 வயதுடைய தானிஷ்க் ஆபிரகாம் என்ற சிறுவன் வசித்து வருகிறார்.

இந்த சிறுவன் தனது பள்ளிப்படிப்புக்கான தேர்வை எழுதி, அதில் வெற்றி பெற்று டிப்ளமோ பட்டம் பெற்றுளார். இது அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இது குறித்து அந்த சிறுவன் கூறுகையில், ”இது எளிமையானது அல்ல. நான் கடுமையாக முயற்சி செய்தேன், இறுதியில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் அடுத்து சமுதாயக் கல்லூரியில் சேர்ந்து படிப்பேன். அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பு படிப்பேன். எதிர்காலத்தில் விஞ்ஞானி அல்லது மருத்துவராக ஆக ஆசைப்படுகிறேன். எனக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவும் ஆசை" என்று தெரிவித்துள்ளார்.

0 comments

Post a Comment