Pages

Tuesday, June 10, 2014

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம்: ஜுன் 11, 1947

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம்: ஜுன் 11, 1947இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி பிறந்தார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்தவர். 

இந்தியாவின் 4-ஆம் மக்களவையில் மத்திய அரசின் ரயில்வே அமைச்சராகப் பணியாற்றினார். 14-ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 15-ஆம் மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவை தொகுதியில் வெற்றியும் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் தோல்வியும் அடைந்தார். 

1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு லாலு குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கியது. இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது, இதனால் இவர் மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை இழந்தார். 

லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. 

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:- 

1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது. 

1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. 

1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது. 

1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார். 

1981 - ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர். 

2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார். 

2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக்கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது. 

2007 - கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.

0 comments

Post a Comment