Pages

Wednesday, June 11, 2014

சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு

Mobileஇணையத்தின் வழியாக நடைபெறும் சைபர் தாக்குதல்களால் மட்டும் வருடத்திற்கு உலக அளவில் 40 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாக்கப்இ சர்வதேச உத்தி மற்றும் ஆய்வுக்கான மையம் (சிஎஸ்ஐஎஸ்) சார்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதும் இணைய வழியாக நடைபெறும் சைபர் குற்றங்களின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் தெரிய வந்துள்ளது. உலக முழுவதும் நடைபெறும் சைபர் குற்றங்களின் காரணமாக ஆண்டிற்கு 40 ஆயிரம் கோடி டாலர் வரை இழப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் ஆண்டிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலையை இழந்தும் வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த சைபர் தாக்குதல்களால் உலகம் முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதத்திற்கு அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வருமான ஈட்டும் வழிகளில் சைபர் தாக்குதல்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் முறை 27 வது இடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த தாக்குதல்களை மிகவும் தொழில்நுட்ப அளவில் நேர்த்தியான கட்டமைப்புடன் சுமார் 20 முதல் 30 குழுக்கள் நடத்தி வருகின்றன. உலகம் முழுவதும் சட்டவிரோதமாக போதை பொருட்கள் கடத்தல், மற்றும் தகவல் திருட்டு தளங்கள் மூலம் எந்த அளவிற்கு உலகப் பொருளாதாரம் பதிக்கிறதோ, அதே அளவிற்கு இந்த சைபர் குற்றங்கள் மூலமாகவும் பாதிப்பு உருவாக்கப் படுகிறது என்று தெரிய வந்திருக்கிறது.
இதன் காரணமாக சைபர் குற்றங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலமே ஒரு திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை நாடுகள் எளிதில் அடையமுடியும். எதிர்பாராத இழப்புகளால் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய குற்ற புலனாய்வு கழகமான ( என்சிஏ ) ஆபரேஷன் டோவார் என்ற பெயரில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் ஹேக்கர்களை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

0 comments

Post a Comment