Pages

Thursday, June 12, 2014

13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞனை பிரம்பால் அடித்த தாய்

தனது 13 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரை தடியால் அடித்த தாயொருவர் சட்டத்தை தனது கையில் எடுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மலேசியாவிலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த தாய் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 28 வயது இளைஞனின் கைகளையும், கால்களையும் கட்டி வைத்து அவனது வெற்று பிருஷ்டப் பகுதியில் தடியால் தாறுமாறாக அடிப்பதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் மேற்படி இளைஞனை மடக்கிப் பிடித்து கை, கால்களை கட்டி குறிப்பிட்ட பெண் அடிப்பதற்கு துணை புரிந்தவர்களும் அந்த இளைஞனை பிரம்பால் அடித்த அந்தப்பெண்ணும் சட்டத்தை கையில் எடுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளதாக உதவி பொலிஸ் ஆணையாளர் லாயி யொங் ஹெங் தெரிவித்தார்.
இந்த பாலியல் வல்லுறவுடன் தொடர்புடைய இரண்டாவது நபரொருவரும் கூட்டத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்.
-

0 comments

Post a Comment