Pages

Thursday, June 12, 2014

15 வயதான மகனின் நண்பனுடன் பாலியல் உறவு வைத்த தாய்!

தனது மகளின் நண்பனான 15 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான ஹீதர் சாலின்ஸ் எனும் இப்பெண் சிறுவனொருவனுக்கு தனது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதகாவும் அச்சிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது வல்லுறவுக் குற்றச்சாட்டை ஹீதர் சாலின்ஸ் நிராகரித்தார். எனினும் 15 வயதான அச்சிறுவனுடன் இரு தடவை தான் பாலியல் உறவு கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனது மகளின் நண்பனான அச்சிறுவன் 15 வயதானவன் போல் தென்படவில்லை எனவும் வளர்ந்த ஒருவரைப் போல் அவன் செயற்பட்டான் எனவும் ஹீதர் சாலின்ஸ் நீதிமன்றில் கூறினார். அச்சிறுவனுக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதையும் கடந்த மார்ச் மாதத்தில் ஹோட்டலொன்றிலும் வாகனத் தரிப்பிடமொன்றிலும் வைத்து அச்சிறுவனுடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், அச்சிறுவனை தான் வல்லுறவுக்கு உட்படுத்தவில்லை எனவும் ஹோட்டலுக்குச் சென்று பாலியல் உறவில் ஈடுபடுவது அச்சிறுவன் வழங்கிய யோசனைதான் எனவும் பொலிஸாரிடம் ஹீதர் கூறியுள்ளார். இப்பெண்ணுக்கு இரு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள ஹீதர் சாலின்ஸ், மேற்படி சிறுவனிடமிருந்தும் அவனின் குடும்பத்தினரிடமிருந்தும் விலகியிருக்குமாறு நீதின்றம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வழக்கு விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


0 comments

Post a Comment