Pages

Thursday, June 12, 2014

ஒபாமாவின் வாழ்த்து… தடுக்கி விழப்போனார் பல்கலைக்கழக மாணவி


அமெரிக்க பல்கலைக்கழகமொன்றின் கூடைபந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாராட்டும் வைபவத்தில் மாணவியொருவர் நிலைதடுமாறி விழப்போனதால் அவரை தாங்கிப்பிடிக்க ஜனாதிபதி ஒபாமா முற்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

அமெக்கரிக்காவின் என்.சி.ஏ.ஏ. கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கெனக்டிகட் பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சம்பியனாகினர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கிடையிலான கூடைபந்தாட்டப் போட்டிகளில் ஒரு வருடத்தில் ஒரே பல்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சம்பியனாகியமை இது இரண்டாவது தடவையாகும்.

இவ்வணிகளின் வீரர், வீராங்கனைகளை வெள்ளை மாளிகையில் பாராட்டு வைபவம் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. மகளிர் அணியின் பயிற்றுநர் ஜெனோ அயூரியெமாவை ஜனாதிபதி ஒபாமா கட்டித்தழுவி பாராட்டிக் கொண்டிருந்தபோது வரிசையில் நின்றிருந்த ஸ்டெபனி டோல்சன் எனும் மாணவி திடீரென நிலைதடுமாறி விழப்போனார்.

அதனை அவதானித்த ஜனாதிபதி பராக் ஒபாமா அம்மாணவியை தாங்கிப்பிடிப்பதற்காக ஓடிச்சென்று முன்றார்.

எனினும் 6 அடி 5 அங்குல உயரமான அந்த மாணவி தன்னை சுதாகரித்துக்கொண்டார். அதையடுத்து பலரும் நிம்மதி பெருமூச்சுவிட அரங்கில் சிரிப்பலை பரவியது.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்ததன் மகிழ்ச்சியால் ஏற்பட்ட புன்னகை அம்மாணவியின் முகத்தில் நீண்ட நேரம் நீடித்தது.





0 comments

Post a Comment