மொபைல் போனில் சிலர் மிகவேகமாக எழுத்துக்களை டைப்பிங் செய்வதை நாம் பார்த்துள்ளோம் .ஆனால் பிரேசில் நாட்டு சிறுவன் ஒருவன் மொபைல் போனில் மிகவேகமாக டைப்பிங் செய்து சாதனை படைத்துள்ளான். அவனுடைய சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டது. பிரேசில் நாட்டை சேர்ந்த 16 வயது Fernandes என்ற சிறுவன், மொபைல் போனில் 25 வார்த்தைகள் கொண்ட ஒரு பத்தியை வெறும் 18.19 வினாடிகளில் டைப் செய்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னாள் இதே பத்தியை கவுரவ் சர்மா என்ற இந்தியர் 18.44 வினாடிகளில் டைப் செய்ததே இதுவரை சாதனையாக இருந்தது. Fernandes அவர்களின் சாதனை கின்னஸில் பதிவு செய்யப்பட்டது.

Fernandes இந்த சாதனையை மைக்ரோசாப்ட் புதிய அறிமுகப்படுத்திய Windows Phone 8.1 software மூலம் செய்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கண்ட இரண்டு சாதனையாளர்களுமே டைப்பிங் செய்தது கீழே உள்ள பத்தியைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
“”The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.”
கின்னஸ் சாதனையை செய்த பின்னர் Fernandes செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தனக்கு சிறுவயதில் இருந்தே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது என்றும், தனக்கு ஆறு வயதிலேயே தனது பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்துவிட்டார்கள் என்றும் கூறினார்.
ஆனாலும் தான் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகவில்லை என்றும், தேவைப்படும்போது மட்டுமே ஸ்மார்ட் போனை பயன்படுத்துவேன் என்றும் கூறினர். மேலும் தனது சாதனையும் கண்டிப்பாக கூடிய விரைவில் யாராவது முறியடிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் -

0 comments
Post a Comment