Pages

Thursday, June 12, 2014

பல்கனியில் செக்ஸ் வைத்த ஜோடி: உணர்ச்சி மிகையால் தவறி விழுந்து பரிதாபப் பலி


லண்டனில் கல்வி கற்றுவரும் 19 வயது ரஷ்ய மாணவி, மற்றும் அவரது 18 வயது காதலன் இருவரும் நேற்றைய தினம் பரிதாபமாக இறந்துள்ளார்கள்.

லண்டன் மைய நகரப்பகுதில் உள்ள, ஆரம்பரமான தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்தே இவர்கள் இருவரும் விழுந்து இறந்து போனார்கள்.

ரஷ்யாவில் உள்ள பெரும் செல்வந்தர் ஒருவரின் மகளே இவ்வாறு இறந்தவர் ஆவார். இவர்கள் இருந்த தொடர்மாடிக் குடியிருப்புக்கு முன்னால் உள்ள தொடர்மாடியில் வசிக்கும் ஒருவர் சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு இவ்விருவரும் பல்கனியில் இருந்து உடலுறவில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் மறு நிமிடம் கூக்குரல் கேட்டுள்ளது.

அப்போது தான் திரும்பிப் பார்த்தபோது அவர்கள் இருவரும் தவறி விழுந்து விட்டதாகவும், தரையை நோக்கி சென்று கொண்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனே தான் இறங்கிச் சென்று கீழே பார்த்ததாகவும், அவர்கள் இருவரும் ரத்தவெள்ளத்தில் மிதந்து கிடந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்கனியில் வைத்து உடலுறவில் ஈடுபட்டவேளை இவர்கள் இருவரும் தவறி விழுந்து இறந்துவிட்டதாக தற்போது மெற்றோ பொலிடன் பொலிசார் உறுதிசெய்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் சிலவேளைகளில் மது அருந்தி இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே எதனையும் தெளிவாகத் தெரிவிக்க முடியும் என்று பொலிசார் கூறிவிட்டார்கள்.

குறித்த பெண்ணின் பெற்றோர், விசேட தனியார் விமானம் மூலம் ரஷ்யாவில் இருந்து லண்டன் வந்துள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது.

பிள்ளைகளை பெற்றோர் படிக்க அனுப்பும் போது அவர்கள் தனியாக இருந்தால், என்ன செய்கிறார்கள் என்பது தொடர்பாக தெரிந்து வைத்திருத்தல் நல்லது.







0 comments

Post a Comment