சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004- 2005 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங்கின் ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவை மந்திரியாக இருந்தார். இருந்தார்.சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்த சுனில் தத், 1984-ம் ஆண்டு மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்றார். பின்னர் இதே தொகுதியில் 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5 முறை எம்.பியாக இருந்த சுனில் தத் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவரது மனைவி மறைந்த பிரபல இந்தி நடிகை நர்கீஸ்.
இவர் உடல் நலக்குறைவால் 2005-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி மும்பையிலுள்ள அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது. * 1752 - மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன. * 1761 - சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது. * 1808 - நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான். * 1832 - பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது. * 1844 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது. * 1859 - குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. * 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். * 1882 - அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் மும்பையில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். * 1912 - அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது. * 1930 - இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது. * 1971 - சோயுஸ் 11 ஏவப்பட்டது. * 1974 - சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது. * 1981 - இந்தியாவில் ரெயில் ஒன்று பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். * 1984 - இந்திய ராணுவத்தினர் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர். * 1993 - மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது. * 2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

0 comments
Post a Comment