Pages

Sunday, June 15, 2014

பட்டமளிப்பு விழாவில் பாலூட்டிய தாய்: இணையத்தில் வெளியான படங்கள்

அமெரிக்காவில் தாயார் ஒருவர், தனது பட்டமளிப்பு விழாவின் போது தன் குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த கர்லேசா துர்மன் (25) என்பவர், பட்டப்படிப்பின் கடைசி வருடத்தில் திருமணம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் லாங் பீச் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு இவர், தனது மூன்று மாத பெண் குழந்தை ஆலீயாவையும் அழைத்து வந்துள்ளார்.

மேலும், பட்டமளிப்பு விழாவின் போது, தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கர்லேசா கூறுகையில், இது இயல்பானது என்றும் இதில் எந்தவித தவறும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தில் இருந்து தனது புகைப்படத்தை நீக்கினாலும், இதனை நிறைய பேர் பகிர்ந்திருக்கின்றனர். மேலும் பாலூட்டுதலுக்கான விழிப்புணர்வை எற்படுத்தும் என பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

0 comments

Post a Comment